கௌதமாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் - சிறுவன் உள்பட 4 பேர் பலி

10 ஆடி 2025 வியாழன் 18:25 | பார்வைகள் : 209
மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி சிறுவன் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கு 3 முதல் 5.7 வரை ரிச்டர் அளவுகளில் 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.
தொடர் நில நடுக்கங்களால் பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து நிலநடுக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.