காதலை உறுதிப்படுத்திய நடிகை சமந்தா?
10 ஆடி 2025 வியாழன் 16:30 | பார்வைகள் : 4283
இயக்குநர் ராஜ் நிதிமோரு மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் டேட்டிங் செய்வதாக கூறப்பட்ட நிலையில் அமெரிக்க சுற்றுலாவில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. பேமிலி மேன், ஃபர்சி உள்ளிட்ட இணைய தொடர்கள் மற்றும் பல திரைப்படங்களை இயக்கியவர் ராஜ் நிதிமோரு. இதில் பேமிலி மேன் சீரிஸில் நடிக்கும்போது ராஜ் சமந்தா இடையே பழக்கம் உண்டானதாக சொல்லப்படுகிறது.
இதன்பின் ராஜ் நிதிமோரு இயக்கிய Citadel: Honey Bunny தொடரிலும் சமந்தா நடித்திருந்தார். இந்த சீரிஸுக்கு பின் இவரும் நடிகை சமந்தாவும் பொது இடங்களில் ஒன்றாக செல்வது அதிகமாகி வந்த நிலையில் இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க பயணத்தின் போது ராஜ் நிதிமோருவுடன் எடுத்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் தங்கள் இருவருக்குள் இருக்கும் உறவை சமந்தா உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதேநேரம், இயக்குநர் ராஜின் மனைவி இன்ஸ்டா பதிவில் வெளியிட்டுள்ள கருத்தும் கவனம் ஈர்த்துள்ளது. ராஜின் மனைவி சியாமலி தனது பதிவில், "நம் செயல்கள் மற்றவர்களை காயப்படுத்தக் கூடாது. அது தான் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதி" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan