ஜூலை 14 : 1,000 ட்ரோன்கள் மூலம் வான வேடிக்கை!!

10 ஆடி 2025 வியாழன் 09:42 | பார்வைகள் : 882
ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வின் போது ட்ரோன்களை பயன்படுத்தி வானத்தில் வேடிக்கை காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
Champs-Élysées இல் பகல் முழுவதும் பாரம்பரிய நிகழ்வுகள், இராணுவ அணிவகுப்பு, இராணுவ வீரர்கள், வாகனங்கள், குதிரைப்படைகள், விமான சாகசம் போன்ற நிகழ்வுகளுடன், வானவேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன. ஆனால் பட்டாசுகளுக்கு பதிலாக இம்முறை ட்ரோன்களை பயன்படுத்தி வான வேடிக்கை காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்காக 1,000 ட்ரோன்களை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 14, இரவு 11 மணிக்கு இந்த காட்சியை சோம்ப்ஸ்-எலிசே மீது காண முடியும். பட்டாசுகள் பயன்படுத்துவதை விடவும் இந்த ட்ரோன்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு மிக குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.