பிரான்ஸ் - பிரித்தானியா "one in, one out" ஒப்பந்தம்!!

10 ஆடி 2025 வியாழன் 08:42 | பார்வைகள் : 865
அகதிகளையும், குடியேற்றவாதிகளையும் ‘மாற்றிக்கொள்ளும்’ திட்டம் ஒன்று குறித்து பிரான்சும் பிரித்தானியாவும் ஆலோசித்து வருகிறது.
பிரான்சில் இருந்து ஆங்கிலக்கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு அகதிகள் செல்லும் போது, அவர்களை மீண்டும் பிரான்சுக்கே அழைத்துவரப்படுவார்கள். அவ்வாறு அழைத்து வரும் ஒவ்வொரு அகதிகளுக்கும் பதிலாக பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு குடியேற்ற கோரிக்கையுள்ள ஒருவரை பிரான்ஸ் அனுப்பும். அப்படி அனுப்பப்படுபவர் பிரித்தானியாவில் குடும்ப கொண்ட ஒருவராகவோ, ஏதேனும் ஒரு வகையில் பிரித்தானியாவுடன் தொடர்பில் உள்ள ஒருவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ”ஒருவர் உள்ளே.. ஒருவர் வெளியே” (one in, one out) ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமரும், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆலோசித்து வருகின்றனர். வாரத்துக்கு 50 அகதிகளை இவ்வாறு இடம்மாற்றுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் கணக்குவழக்கு இல்லாமல் அதிகள் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க முடியும் என பிரித்தானியா நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.