Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு - அமெரிக்காவில் 207 ஆண்டுகள் சிறை!!

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு - அமெரிக்காவில் 207 ஆண்டுகள் சிறை!!

10 ஆடி 2025 வியாழன் 07:33 | பார்வைகள் : 1186


 

மோசடி வழக்கு ஒன்றில் பிரான்சில் சென்ற ஆண்டு கைது செய்யப்பட்ட ஒருவருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.

டுபாயில் வசிக்கும் Sami D என்பவர், கடந்த 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் இணையத்தளங்கள் சிலவற்றை முடக்கி, அவற்றின் டொமைன்களை மீள விற்பனை செய்துள்ளார். அவற்றில் சில அரச இணையத்தளங்களும் உள்ளன. முக்கியமாக அமெரிக்காவின் பல முக்கிய இணையத்தங்களை இவ்வாறு முடக்கியுள்ளார்.

மொத்த சேதங்கள் 60,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 2 மில்லியன் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தது. அதை அடுத்து சென்ற வருட கோடைகாலத்தின் போது பரிசில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் விரைவில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். அவருக்கு 207 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்