Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் விமான நிலையம்

ஜப்பானில் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் விமான நிலையம்

10 ஆடி 2025 வியாழன் 07:16 | பார்வைகள் : 336


ஜப்பானின் கன்சாய் (Kansai) விமான நிலையம் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையம் (KIX), 1994-ல் தொடங்கப்பட்டு, Osaka Bay-யில் கடலில் கட்டப்பட்ட செயற்கை தீவில் அமைந்துள்ளது.

இது வருடத்திற்கு 3 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளை இணைக்கும் முக்கிய வானூர்தி மையமாக விளங்குகிறது.

ஆனால் இந்த அதிசய கட்டட நுட்ப சாதனையின் பின்னால் ஒரு பாரிய பிரச்சினை உள்ளது.

இந்த விமான நிலையம் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கிக் கொண்டே போகிறது.

முதலில் கட்டப்பட்ட தீவு இதுவரை சுமார் 12.5 அடி அளவுக்கு தாழ்ந்துள்ளது. விரிவாக்கமாக உருவாக்கப்பட்ட இரண்டாவது தீவு 57 அடி வரை தாழ்ந்துவிட்டது. 2024-ல் மட்டும் 21 செ.மீ தாழ்வு பதிவாகியுள்ளது.

Osaka-வில் நிலப்பரப்பின் குறைபாடு மற்றும் நகரச்சத்தத்தை குறைக்கும் நோக்கில் கடலில் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு உள்ள மென்மையான மணற்படிவ நிலம் (alluvial clay) காரணமாக கட்டிடம் நிலத்தை தொடர்ந்து அழுத்துகிறது.

தொலைநோக்குப் பராமரிப்பு திட்டங்களில், 2.2 மில்லியன் நெடுந்துளைகள் போடப்பட்டு, 200 மில்லியன் க்யூபிக் மீட்டர் மண் நிரப்பப்பட்டு, 48,000 tetrapods போன்றவை பயன்படுத்தப்பட்டன.

ஆனால் முழுமையான நிலைத்தன்மை கிடைக்கவில்லை.

2018-ல், Jebi புயல் காரணமாக விமான நிலையம் கடுமையாக வெள்ளத்தில் மூழ்கி, மின் வசதிகள் பாதிக்கப்பட்டன.

5,000 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் பின்னர், வழிப்படுத்தல் மையங்கள் நிலத்தளத்துக்கு மேலே மாற்றப்பட்டன.

Nagoya-விலுள்ள Chubu Centrair விமான நிலையம் KIX-இன் பிழைகளை தவிர்த்து கட்டப்பட்டது.

அதிக நிலைத்தன்மையுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனால் இது 11 ஆண்டுகளாக உலகின் சிறந்த பிராந்திய விமான நிலையமாக விளங்குகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்