Paristamil Navigation Paristamil advert login

லால் சலாம் தோல்விக்கு ரஜினி காரணமா?

லால் சலாம் தோல்விக்கு ரஜினி காரணமா?

9 ஆடி 2025 புதன் 16:33 | பார்வைகள் : 140


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லால் சலாம் என்ற படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு வேடத்தில் தோற்றமளித்திருப்பார்.

இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் தொடர்பான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தயாரித்திருப்பார்கள். இந்த படத்தில் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சமூக பிரச்சினைகள் பல பேசப்பட்டிருக்கும்.

இந்த படம் பிப்ரவரி 9, 2024 அன்று வெளியிடப்பட்டது. இந்த கதைகளம் பெரும்பாலும் மக்களிடையே நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டு விமர்சனங்களையும் பெற்றது. ஆனால் படம் தோல்வியில் முடிந்தது. இதற்கு காரணமாக ஒரு சில காட்சிகள் படத்தில் வைக்கப்படவில்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம் கூறியிருப்பார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் அளித்த நேர்காணல் ஒன்றில் . ஆரம்பத்தில் நான் தான் லால்சலாம் படத்தின் ஹீரோ என்றும் ரஜினிகாந்த் அவர்கள் cameo-வில் நடிக்க இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் அதை மாற்றி முழு படத்திலும் காட்சியளித்தார்.

படத்தில் என்னுடைய வேடம் குறைக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக அதுதான் படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் தோல்விக்கு காரணமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். இவ்வாறு விஷ்ணு விஷால் அவர்கள் திடீரென்று மனம் திறந்து பேசிய நிலையில் இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்