Paristamil Navigation Paristamil advert login

மமிதா பைஜு - கைவசம் இத்தனை படங்களா?

மமிதா பைஜு - கைவசம் இத்தனை படங்களா?

9 ஆடி 2025 புதன் 15:33 | பார்வைகள் : 159


கேரளத்து நடிகைகளுக்கு மலையாள திரையுலகை காட்டிலும் கோலிவுட்டில் தான் அதிக மவுசு உண்டு. தமிழ் சினிமாவில் கோலோச்சிய ராதா, நயன்தாரா, நதியா ஆகியோர் கேரளாவில் இருந்து வந்தவர்கள் தான். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் தான் மமிதா பைஜு. இவர் பிரேமலு என்கிற மலையாள படம் மூலம் தன்னுடைய துறுதுறு நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இதனால் மலையாளத்தைக் காட்டிலும் தமிழ் சினிமாவில் தான் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது அரை டஜன் படங்களில் நடிக்கிறார் மமிதா. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

நடிகை மமிதா பைஜு நடிப்பில் தற்போது தமிழில் ஜனநாயகன் திரைப்படம் தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் கடைசி படம் இதுவாகும். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 2026-ம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் டிஜே அருணாச்சலத்துக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை மமிதா பைஜு கைவசம் உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் சூர்யா 46. இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் மமிதா. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இதுதவிர இரண்டு வானம் என்கிற தமிழ் படத்திலும் நடித்து முடித்துள்ளார் மமிதா. இப்படத்தை ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மமிதா பைஜு. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

நடிகை மமிதா பைஜு அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார். இவர் தமிழில் அசோக் செல்வன் நடித்த போர்த் தொழில் படத்தின் இயக்குனர் ஆவார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் இம்மாதம் தொடங்க உள்ளது.

அதேபோல் கோலிவுட்டின் பிளாக்பஸ்டர் ஹிட் நாயகனான பிரதீப் ரங்கநாதன் உடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் மமிதா. அப்படத்தின் பெயர் டியூடு. அப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். அப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அப்படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு டியூடு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்