ஓர்லி விமான நிலையத்துக்குள் நுழைந்த காட்டுப்பன்றி!!

9 ஆடி 2025 புதன் 09:51 | பார்வைகள் : 841
ஓர்லி சர்வதேச விமான நிலையத்துக்குள் காட்டுப்பன்றி ஒன்று நுழைந்துள்ளது. விமான நிலையத்தின் பல இடங்களில் உலாவித்திரியும் பன்றியின் காணொளி இணையத்தளத்தில் பெரும் வைரல் ஆகியுள்ளது.
கறுப்பு நிற காட்டுப்பன்றி ஒன்று ஓர்லி விமான நிலையத்தின் பல இடங்களில் நடந்து செல்கிறது. அதன் அமைதியான சுபாவத்தினால் பயணிகள் அச்சமடையவில்லை. இணையத்தில் வைரலாகியுள்ள இந்த டிக்டொக் காணொளியை பல இலட்சம் பேர் இதுவரை பகிர்ந்துள்ளனர். மொத்த பார்வைகள் மில்லியனைக் கடந்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் இந்த செய்தி ஏன் செய்தி ஊடகங்களில் வெளியாகவில்லை? ஏனென்றால் அது செயற்கை நுண்ணறிவு (A.I) கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி.
Cors தீவைச் சேர்ந்த ஒரு இளைஞன் அதனை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டகிராம் கணக்கில் சென்று காணொளியை பார்வையிட முடியும்.