பிரேசிலின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
9 ஆடி 2025 புதன் 11:20 | பார்வைகள் : 2548
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பிரேசிலியாவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அல்வோராடா மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரேசிலின் உயரிய 'Grand Collar of the National Order of the Southern Cross', விருதை அந்நாட்டு அதிபர் லுாலா டி சில்வா வழங்கி கவுரவித்தார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இதற்கு முன் 3 முறை பிரேசில் சென்றுள்ளார். முதலாவதாக ஜூலை 2014ம் ஆண்டில் சென்றார். அதைத் தொடர்ந்து 2019ல் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மற்றொரு பயணம், கடந்த ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என 3 முறை சென்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரேசில் சென்றார். மாநாட்டுக்கு பிறகு, பிரதமர் மோடி, பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்கு சென்றார்.
அப்போது பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரினிடாட் மற்றும் டுபாகோ நாட்டின் உயரிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி டிரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan