Paristamil Navigation Paristamil advert login

கொள்ளையர்களின் புதிய முறை - மிகவும் அவதானம்!!

கொள்ளையர்களின் புதிய முறை - மிகவும் அவதானம்!!

9 ஆடி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 1537


சில நகரங்களில், கொள்ளையர்கள் நகராட்சி ஊழியர்களாக நடித்து வீடுகளில் நுழைவதற்குப் புதிய வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்

அந்தோனியில் நடந்த சம்பவம்

Hauts-de-Seine  மாவட்டத்தில் உள்ள அந்தோனி(Antony) நகரில், சிலர் தங்களை நகராட்சி பணியாளர்களாகக் கூறி வீடு தோறும் சென்று, தொண்டு நிறுவனங்களுக்காக ஆடைகளை சேகரிக்க வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது நன்கு திட்டமிடப்பட்ட மோசடி. உண்மையில், அவர்கள் செய்யும் வேலை வீட்டைச் சோதனை செய்தல், வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை வேவு பார்தல், அல்லது யாரும் இல்லாத நேரத்தில் வீட்டினுள் நுழைந்து திருடுதல் ஆகியவையாகும். சில சந்தர்ப்பங்களில், மக்களின் நம்பிக்கையைப் பெறவே அவர்கள் உண்மையாகவே கொடுக்கப்படும் ஆடைகளை எடுத்துச் செல்வதாகவும், பின்னர் அவற்றை விற்றுவிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


அதிகாரப்பூர்வ எச்சரிக்கை

அந்தோனி நகராட்சி தனது இணையதளத்தில் மக்கள் அனைவரும் அவதானமாக இருக்கவேண்டும் என அறிவித்துள்ளது.

«உங்கள் குடியிருப்புகளில் ஆடைகள் சேகரிக்கப் பொய்யாக வரும் முயற்சிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறோம். நகராட்சி யாரையும் உங்கள் வீடுகளுக்குச் சென்று ஆடைகளை சேகரிக்க அனுமதிப்பதில்லை.»

பாதுகாப்பிற்கான ஆலோசனைகள்

அறியாத நபர்களுக்குக் கதவைத் திறக்க வேண்டாம்

அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் இருந்தாலும்கூட எச்சரிக்கையாக இருங்கள்

ஊராட்சி அல்லது காவற்துறையினரிடம் உறுதிப்படுத்தவும்

உறவினர்கள் மற்றும் அண்டைவீட்டாரிடமும் இந்த விவரங்களை பகிரவும்

இவை போன்ற மோசடிகள், விடுமுறை காலங்களில், வீடுகள் வெறிச்சோடும்போது அதிகரிக்கும் என்பதால், உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்கும்படி முன்னெச்சரிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்