கிரிப்டோ - மீண்டும் ஒரு தாக்குதல்!

9 ஆடி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1375
Suresnes (Hauts-de-Seine) இல் வசிக்கும் ஒரு பெண், கிரிப்டோகரன்சிகள் வைத்திருப்பதற்காக வன்முறையுடன் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் ஜூலை 7ஆம் தேதி அவரது வீட்டில் நடந்தது. தமது கணவரும், குழந்தைகளும் இருக்கும்போதே, மூன்று கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து, அவரைப் பலமுறை முகத்தில் தாக்கினர்.
தாக்குதலுக்குப் பின்னர், அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் பின்னர் காவற்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
வன்முறையைத் தொடந்த பின்னர், குற்றவாளிகள் தப்பிச்சென்றனர்.
அவர்களில் ஒருவரை காவற்துறையினர் பிடிக்கையில், அவரிடம் இருந்து பெரிய வெட்டுக் கத்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர் இந்நிலையிலுள்ள குடும்பம் கிரிப்டோ சொத்துகள் வைத்திருப்பதற்காகவே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒப்புக் கொண்டார்.
வழக்கு மற்றும் விசாரணை
'வன்முறையுடன் கொள்ளை முயற்சி' என்கிற குற்றத்தின் அடிப்படையிடூல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை Hauts-de-Seine மாவட்டக் குற்றப்புலனாய்வு காவற்துறையினர் விசாரிக்கின்றனர்.
தொடர்ச்சியாக அதிகரிக்கும் கிரிப்டோ குற்றங்கள்
இது தனி சம்பவமாக இல்லை. கடந்த சில மாதங்களில், கிரிப்டோ சொத்துகள் வைத்திருக்கும் பலர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்:
ஜனவரி 21, 2025: Ledger நிறுவனர் David Balland, அவரது வீட்டில் கடத்தப்பட்டார். ஒரு விரல்கூட வெட்டப்பட்டது – நிதி கோர அழுத்தம் கொடுக்கவே இந்த வன்முறை பிரயோகிக்கப்பட்டது.
மே 3, 2025: ஒரு கிரிப்டோ பணக்கார இளைஞரின் தந்தை கடத்தப்பட்டார். பலேஸோவில் (Palaiseau)> BRI (Brigade de recherche et d'intervention) பிரிவு அவரை மீட்டது.
இந்த சம்பவங்கள், கிரிப்டோ சொத்துகள் கொண்டவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர சிந்தனையை ஏற்படுத்துகின்றன. சமூக ஊடகங்கள் வழியாக தகவல்கள் பரவுவதும், குற்றவாளிகள் இலக்குகளை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2