மார்செய் விமான நிலையம்: - விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

9 ஆடி 2025 புதன் 00:02 | பார்வைகள் : 292
மார்செய் விமான நிலையம்: - விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!
மார்செய் நகரை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட கடும் காட்டுத்தீயால் இன்று நண்பகலிலிருந்து நிறுத்தப்பட்டிருந்த Marseille-Provence விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இரவு 9:30 மணிக்குப் பிறகு பகுதியாக மீண்டும் தொடங்கும் என்று விமான நிலையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 'பகுதியளவு மீட்பு' நடவடிக்கையால், இரவு நேரத்துக்குத் திட்டமிடப்பட்ட புறப்படும் மற்றும் வந்திறங்கும் விமானங்கள், மேலும் சில கட்டுப்பாட்டு தேவைக்கான சேவைகள் இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயின் பாதை ஓடுபாதைக்கு நேராக இருந்ததாலும், தீயணைக்கும் விமானங்களுக்கும் உலங்குவானூர்திகளும் செயல்பட இடமளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், மதியம் 12:12 மணி அளவில் விமான நிலையம் மூடப்பட்டது,
இதுவரை 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் அவை மீண்டும் திட்டமிடப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பப்பட்டுள்ளன.
இரவு 9:30க்கு பின்னர், 10 புறப்பாடுகள் மற்றும் 9 வருகைகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் விமான நிலையம் அறிவித்துள்ளது.