பிரித்தானிய பாராளுமன்றத்தில் மக்ரோன்! - அகதிகளை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை!!

8 ஆடி 2025 செவ்வாய் 20:06 | பார்வைகள் : 651
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகியோர் பிரித்தானியாவுக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்தனர். மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள அவர்கள், வியாழக்கிழமை நாடு திரும்ப உள்ளனர்.
பிரெஞ்சு ஜனாதிபதி ஒருவர் கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியாவுக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மக்ரோன், பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார். குறிப்பாக அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.
“அகதிகள் வருகையை பிரான்ஸ்-பிரித்தானியா இணைந்து தடுக்க வேண்டும். "மனிதநேயம், ஒற்றுமை மற்றும் உறுதியுடன்" அகதிகள் வருகையை தடுக்க வேண்டும்!” என மக்ரோன் குறிப்பிட்டார்.
அவரது உரையின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக நீண்ட நேரம் எழுந்து நின்று கைகளை தட்டி பாராட்டினார்கள்.