மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் - சென் நதி நீச்சல் தடாகம்!!

8 ஆடி 2025 செவ்வாய் 20:06 | பார்வைகள் : 398
கடந்த சனிக்கிழமை பரிஸ் சென் நதியில் மூன்று நீச்சல் தடாகங்கள் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்கள் நீந்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று இரவு கொட்டித்தீர்த்த மழையினால் தண்ணீர் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, தடாகங்கள் மூடப்பட்டன.
சென்ற வருடம் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது திறக்கப்பட்டவை போன்று மூன்று நீச்சல் தடாகங்கள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தடாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளை ஜூலை 9, புதன்கிழமை மீண்டும் தடாகங்கள் திறக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் 2,300 பேர் நீந்தியிருந்தமை குறிப்பிடக்கது.