Paristamil Navigation Paristamil advert login

மார்செய் நகரிற்குள் பரவும் தீ!

மார்செய் நகரிற்குள் பரவும் தீ!

8 ஆடி 2025 செவ்வாய் 18:05 | பார்வைகள் : 2687


Pennes-Mirabeau (Bouches-du-Rhône) இல் இன்று காலை பிற்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, தற்போது மார்செய் நகருக்குள் பரவியுள்ளது.

Bouches-du-Rhône மாகாண ஆணையர் மக்கள் அனைவரையும் உடனடியாக உள்ளிருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

Bouches-du-Rhône ஆணையர் தெரிவித்ததன்படி, 'பத்து வீடுகளுக்கும் அதிகமானவை தீயால் நாசமாகியுள்ளன.'

மார்செய் 13வது நிர்வாக மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் 'வானம் முழுவதும் தீப்பற்றியதைப் போலவே தெரிகிறது.' எனத் தெரிவித்துள்ளார்.:

மார்செய் நகரிலிருந்து வடக்கு மற்றும் மேற்கு திசைகளுக்கு செல்லும் மற்றும் வரும் அனைத்து தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பயணத்தை ஒத்திவைக்கவும், நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம்.' எனப் பயணிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.

GvVttbzWkAErH_f.jpg

 

350 ஹெக்டேர் பரப்பளவு தீயால் ஏற்கனவே எரிந்துள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

'மார்செயில் காட்டுத்தீ. காட்டுப் பகுதியை உடனே விலகுங்கள்.
உறுதியான கட்டிடத்தில் தஞ்சம் அடையுங்கள்.
கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைத்துவையுங்கள்.'

என தீயணைப்புப் படையினர் மார்செய் நகர மக்களிற்குத் தெரிவித்துள்ளனர். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்