Paristamil Navigation Paristamil advert login

வீதி விபத்தில் மூவர் பலி.. ஒருவர் படுகாயம்!!!

வீதி விபத்தில் மூவர் பலி.. ஒருவர் படுகாயம்!!!

8 ஆடி 2025 செவ்வாய் 17:35 | பார்வைகள் : 302


நீஸ் நகரின்  Promenade des Anglais கடற்கரை வீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

ஜூலை 7, நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த இருவரும், மிதிவண்டியில் பயணித்த ஒருவரும் மோதியதில் மூவரும் படுகாயமடைந்து பலியாகியுள்ளனர்.  பாதசாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

மிதிவண்டியில் பயணித்தவர் 35 வயதுடையவர் எனவும், ஸ்கூட்டரில் பயணித்தவர்கள்  25 மற்றும் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

17தீயணைப்பு வீரர்கள் இணைந்து அவர்களை மீட்டனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்