பாரளுமன்றம் கலைப்பு ! புதிய நாடாளுமன்றத் தேர்தல் சாத்தியக்கூறு உண்மையா?

8 ஆடி 2025 செவ்வாய் 16:05 | பார்வைகள் : 563
2024 ஜூன் 9 அன்று எமானுவல் மக்ரோன் பாராளுமன்றத்தை கலைத்ததைத் தொடர்ந்து, இன்று (2025 ஜூலை 8) முதல், அவர் மீண்டும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் உரிமையை பெறுகிறார். இருப்பினும், மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் சாத்தியக்கூறு உள்ளதா?
1958 அரசியலமைப்பின் சட்டம் 12-ன் படி, மக்ரோன் தற்போது தேசிய சபையை மீண்டும் கலைக்க முடியும். ஆனால் அரசியல் விமர்சகர் Phடைippந ஆழசநயர-ஊhநஎசழடநவ கூறுகையில், அதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளதெனக் கருதுகிறார்.
கலைப்பதற்கான உரிமையை பயன்படுத்தாமை என்பது அதைப் பயன்படுத்துவதைவிட மிகவும் முக்கியமானது. மக்ரோனுக்கு அது பாராளுமன்றத்தில் இன்னும் குழப்பங்களை ஏற்படுத்தும் அபாயத்தைத் தரும் என்றும் அவர் கூறுகிறார்.
2024-இல் அவர் மேற்கொண்ட கடைசி கலைப்பு, தேசியப் பேரணியின்(RN) பெரும்பான்மையை எதிர்பார்த்தும், ஜோர்தான் பார்தெல்லா பிரதமராவாரென்ற எண்ணத்துடன் செய்யப்பட்டதுதான். இது கூட்டு ஆட்சி உருவாக்கி மக்ரோனுக்கு அரசியல் பாய்ச்சலை வழங்கும் என அவர் நம்பினார். ஆனால் உண்மையில் நடந்ததாவது, புதிய மக்கள் முன்னணி முதலிடம் பிடித்து, மக்ரோனின் திட்டங்கள் தோல்வியடைந்தன.
மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைக்க முயற்சித்தால், மக்ரோன் அந்த எழுச்சியும் ஒழுங்கும் இன்றி, ஒரே குழப்பத்தில் சிக்கிக் கொள்வதற்கே அதிக வாய்ப்பு உள்ளது என Philippe Moreau-Chevrolet கூறுகிறார்.
ஒரு Ifop-Fiducial கருத்துக்கணிப்பின்படி, 50% பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஒரு தேர்தலை விரும்புகிறார்கள். ஆனால், மட்டும் 34% பேரே மக்ரோன் இந்த சட்டப்பிரிவு (ஆர்டிக்கிள் 12) பயன்படுத்துவார் என நம்புகிறார்கள்.
வாக்களிக்க விருப்பமுள்ளதா எனப் பிரெஞ்சுமக்களிடம் கேட்டால், அவர்கள் ஆம் என்பார்கள். அது ஜனநாயக விருப்பத்தைச் சுட்டிக்காட்டும்; உண்மையான தீர்வுத் தேவை அல்ல
தற்போது, செயல்பாடுகள் குறைந்தாலும், நிலைத்தன்மையை உருவாக்கும் ஒரு பிரதமர் இருக்கிறார். அவரது இருப்பு, பாதீட்டுத் தாக்கல் மற்றும் நிறுவனங்கள் இயங்கும் நிலையை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு தேர்தலை நடத்துவது பல மாத அரசியல் குழப்பத்தை உருவாக்கும் என அரசியல் விமர்சகர் எச்சரிக்கிறார்.
1958 அரசியலமைப்பின் சட்டப் பத்தி 12 ஜனாதிபதிக்கு தேசிய சபையை கலைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. இது இதற்கு முன்பு ஆறு முறை (1962, 1968, 1981, 1988, 1997, 2024) பயன்படுத்தப்பட்டுள்ளது.