Paristamil Navigation Paristamil advert login

அரசின் நஞ்சாக்கல் திட்டம் - LOI DUPLOMB

அரசின் நஞ்சாக்கல் திட்டம் -  LOI DUPLOMB

8 ஆடி 2025 செவ்வாய் 14:04 | பார்வைகள் : 363


2018 ஆம் ஆண்டிலிருந்து பிரான்சில் வேளாண் பயன்பாட்டுக்குத் தடைசெய்யப்பட்ட acétamipride எனும் பூச்சிக்கொல்லி, 2025 ஜூலை 9 செவ்வாய்க்கிழமை, பாராளுமன்றத்தில் மீண்டும் பயன்பாட்டிற்குத் திரும்பும் வாய்ப்பில் உள்ளது.

எது இந்த Duplomb சட்டமூலம்?

Laurent Duplomb என்ற செனட் உறுப்பினர் முன்வைத்த சட்டமூலம், 'விவசாயிகளின் மீது ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்றும்' நோக்கில் உருவாக்கப்பட்டது. கடந்த ஜூன் 30 அன்று கூட்டுச் செயற்குழுவின் ஒப்புதலுடன் புதிய வடிவத்தில் உருவாக்கப்பட்ட இது, ஜூலை 2 அன்று செனட்டில் 232-103 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது இது பாராளுமன்றத்தில் இறுதி வாக்கெடுப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Acétamipride – ஒரு ஆபத்தான பூச்சிக்கொல்லி

– Acétamipride –  என்பது நியோனிகோட்டினாய்டுகள் (néonicotinoïdes) எனும் வகையைச் சேர்ந்த பூச்சிக்கொல்லி

– இது ஒரு systémique பூச்சிக்கொல்லி, அதாவது, செடியில் ஊறி அதன் அனைத்து பகுதிகளிலும் பரவி, அது உண்ணும் பூச்சிகளை மரணமடையச் செய்கிறது

– இது புழுக்கள், ஈய்கள் மற்றும் தேன் தரும் தேனீக்கள் போன்ற பல உயிர்களுக்கு பயங்கரமான விஷமாக இருக்கக்கூடும்

– பிரான்சில் 2018இல் வேளாண் பயன்பாட்டுக்குத் தடைசெய்யப்பட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 2033 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

– இந்நிலை பிரான்ஸ் விவசாயிகளுக்கு அநீதி என வாதிடுகின்றனர் சட்டமூல ஆதரவாளர்கள், ஏனெனில் பிற ஐரோப்பிய நாடுகளில் இதைப் பயன்படுத்தும் விவசாயிகள் விளைச்சல் போட்டியில் முன்னிலை பெறலாம். இது பிரெஞ்சு விவசாயிக

பசுமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன

– Générations Futures, Greenpeace போன்ற சூழலியல் அமைப்புகள் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன

– அவர்களின் முக்கியமான கவலை. தேன் தேனீக்கள் உள்ளிட்ட pollinisateurs உயிரினங்கள் மீது ஏற்படும் பெரும் பாதிப்பு.

– மேலும், மனித நரம்பியல் வளர்ச்சிக்கும் (neurodéveloppement) பின்விளைவுகள் இருக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.

– பிரான்சு அரச ஆலோசனை மையம் (Conseil d'État), acétamipride உட்பட பல பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்யும் அறிவியல் ஆதாரங்களை உயர்மட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளது
 

வர்த்தக‌ விளம்பரங்கள்