மும்பை தாக்குதல் சதிகாரர் ராணா விசாரணையில் கூறிய திடுக் தகவல் என்ன?
8 ஆடி 2025 செவ்வாய் 07:52 | பார்வைகள் : 1088
மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஹூசேன் ராணா விசாரணை அதிகாரிகளிடம் பல திடுக்க தகவல்களை ஒப்பு கொண்டுள்ளார்.
2008 ல் மும்பை பயங்கரவாத தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இந்த சம்பவத்தில் வெளிநாடுகளில் பதுங்கி இருந்த தஹவுர் உசேன் ராணா இந்தியா கொண்டு வரப்பட்டார் அவரிடம் தேசிய புலனாய்பு படையினர் கடந்த 18 நாட்களாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர் பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் பயின்று பாக்., ராணுவ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியதாகவும், இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புக்கு உதவிட இந்தியா சென்றதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்திற்காக உளவு பார்த்ததாகவும், வளைகுடாப் போரில் தனக்கும் பங்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மும்பையில் 2008 ல் தாக்குதல் நடத்தலுக்கு முன்னர் 2 நாட்கள் தங்கி இருந்ததாகவும், பயங்கரவதி ஹெ ட்லியுடன் தொடர்பில் இருந்தேன் என்றும், டில்லி, புனே,கோவா, என பல நகரங்களை சுற்றி வந்து நோட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.
வளைகுடாப் போரின் போது பாகிஸ்தானின் உளவாளியாக சவுதி அரேபியாவில் பணியமர்த்தப்பட்டதாகவும் கூறினார். தனது கூட்டாளியான டேவிட் கோல்மன் ஹெட்லி,
லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ க்கும் இடையில் நெருங்கிய உறவும் தொடர்பும் உண்டு என ராணா அம்பலப்படுத்தினார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சதிகாரர்களுடன் இணைந்து 2005 ஆம் ஆண்டு முதல் மும்பை தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு கடத்தப்பட்டார்
ராணா மீது குற்றவியல் சதி, கொலை, பயங்கரவாதச் செயல் மற்றும் மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.ராணா பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகன். அவர் ஏப்ரல் 2025 இல் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan