இந்தோனேசியாவில் மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட விவசாயியின் உடலம்

7 ஆடி 2025 திங்கள் 20:04 | பார்வைகள் : 221
இந்தோனேசியாவின் தென்கிழக்கு பகுதியில் 8 மீற்றர் நீளம் கொண்ட மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து விவசாயி ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் நீளமான மலைப்பாம்பு ஒன்று போராடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, மலைப்பாம்பு நபர் ஒருவரை விழுங்கியிருப்பதை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மலைப்பாம்பை கொலை செய்து வயிற்றுக்குள் இருந்து விவசாயியின் உடலத்தை மீட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் 63 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.