Paristamil Navigation Paristamil advert login

சிறுவர்களுக்காக ‘மினி’ பேகர்! - நாளை முதல்..!!

சிறுவர்களுக்காக ‘மினி’ பேகர்! - நாளை முதல்..!!

7 ஆடி 2025 திங்கள் 14:40 | பார்வைகள் : 1078


 

சிறுவர்களை ஈர்க்கும் விதமாக Burger King  நிறுவனம் புதிய சிறிய அளவிலான ”mini-burgers” ஒன்றினை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு "baby burgers" என பெயரிடப்பட்டுள்ளது.

நாளை ஜூலை 8, செவ்வாய்க்கிழமை முதல் இது விற்பனைக்கு வருகிறது. மூன்று சிறிய பேர்களைக் கொண்ட பெட்டி மற்றும் குடும்பம், நண்பகளுக்கான ஒன்பது பேகர்களைக் கொண்ட பெட்டி என இரண்டு விதங்களில் இந்த "baby burgers" கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் முழுவதும் உள்ள 578 கிளைகளில் இது நாளை முதல் கிடைக்கும் எனவும், குறிப்பாக இவ்வருட கோடைகாலத்தை இலக்கு வைத்து மட்டுமே இவை விற்பனைக்கு விடப்படுவதாகவும், ஓகஸ்ட் 25 ஆம் திகதி வரை மட்டுமே இவை விற்பனையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பேகர்கள் கொண்ட பெட்டி  €9.90 யூரோக்களுக்கும், குளிர்பானத்துடன் அது €11.90 யூரோக்களுக்கும், ஒன்பது பேகர்கள் கொண்ட பெட்டி  €24.90 யூரோக்களுக்கும், குளிர்பானங்களுடன் அவை €29.90  யூரோக்களுக்கும் விற்பனையாக உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்