Paristamil Navigation Paristamil advert login

காட்டுத்தீ அபாயம் - செம்மஞ்சள் எச்சரிக்கை!

காட்டுத்தீ அபாயம் - செம்மஞ்சள் எச்சரிக்கை!

7 ஆடி 2025 திங்கள் 12:13 | பார்வைகள் : 870


பிரான்சின் தெற்குப் பகுதியில் கடந்த வார இறுதியில் பரபரப்பாகப் பரவிய முதன்மையான காட்டுத்தீயின் பின்னர், ஜூலை 7, திங்கள் காலை, தேசிய வானிலை மையமான ஆéவéழ-குசயnஉந மூன்று மாவட்ங்களிற்கு செம்மஞ்சள் எச்சரிக்கைக்கு (Vigilance rouge) உட்படுத்தியுள்ளது.

செம்மை எச்சரிக்கைக்கு உள்ளடங்குமமாவட்டங்களாக
Aude
Bouches-du-Rhône
Var 
ஆகியவை அமைகின்றன.

வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, இச்சமயத்தில் வானிலைச் சூழ்நிலைகள் மிகுந்த வேகத்தில் காட்டுத்தீக்கள் தோன்றுவதையும் பரவுவதையும் மிக வேகமான அளவில் கடுமையாக எச்சரிக்கத்தக்கவையாக இருக்கின்றவ. வழக்கமான கோடை பருவங்களைவிட அதிக அபாயம் உள்ளதாக இது கருதப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, மூன்று காட்டுத்தீக்கள் ஏற்பட்டன. இவை வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உருவாகின. இதில் A9 நெடுஞ்சாலையின் ஒரு பகுதிகளில் பல மணி நேரம் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. இது விடுமுறை காலத்தின் தொடக்கத்தில் பெரும் பாதிப்பாக அமைந்தது.

மேலும் ஆறு மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கைக்கு  உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை:

Pyrénées-Orientales
Hérault
Gard
Vaucluse
Haute-Corse
Corse-du-Sud

இவைகள் அனைத்தும் காட்டுத்தீ அபாயத்துக்காகத் தயாராக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்