ஈரானில் 18 வயது பிரெஞ்சு சுற்றுலாப் பயணி மாயம்: குடும்பம் கவலையில்!

6 ஆடி 2025 ஞாயிறு 22:09 | பார்வைகள் : 1163
ஈரானில் சைக்கிள் பயணம் செய்த 18 வயது பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் குடியுரிமைகளை கொண்ட இளைஞர் லெனார்ட் மொன்டெர்லொஸ் (Lennart Monterlos) ஜூன் 16ஆம் தேதி முதல் தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாத நிலையில் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பாக அவரது குடும்பத்துடன் பிரான்ஸ் தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும், பிரெஞ்சு குடிமக்கள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே உள்ளவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரஞ்சு தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் மேற்கத்திய நாட்டவர்கள் மீது அடிக்கடி கையாளும் சர்வதேச அழுத்தக் கொள்கைகள் காரணமாக, இந்த விடயம் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், மூன்று வருடங்களாக ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு குடிமக்கள் சிசில் கோலர் மற்றும் ஜாக் பரிஸ் ஆகியோரின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ள நேரத்தில் நிகழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அவர்கள் மீது மொசாட்டிற்காக உளவு பார்த்தல், ஆட்சியை புரட்ட முயற்சி மற்றும் "பூமியில் அகழ்வு" ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நொயல் பாரோ, ஈரான் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும் உடனடியாக விடுவிக்கக் கோரியுள்ளார்.