எலிசே மாளிகை அருகே கொள்ளை!!

6 ஆடி 2025 ஞாயிறு 21:59 | பார்வைகள் : 361
பரிசில் உள்ள் கடை ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. 1€ மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
விலையுயர்ந்த தோல் பைகள், உடைகள், சப்பாத்துக்கள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படும் The Down எனும் கடையே கொள்ளையிடப்பட்டுள்ளது. பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த கடை, ஜூலை 6, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கொள்ளையிடப்பட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பான இடம் என கருதப்படும் எலிசே மாளிகைக்கு மிக அருகில் உள்ள குறித்த கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் அதனை சூறையாடிக்கொண்டு சென்றுள்ளனர்.
Chanel, Hermès, Louis Vuitton மற்றும் Dior போன்ற நிறுவனங்களின் பொருட்களே கொள்ளையிடப்பட்டுள்ளன.
Rue du Faubourg Saint-Honoré வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் நான்காவது தளத்தில் உள்ள குறித்த கடைக்கு, கொள்ளையர்கள் ஏறிச்சென்று கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள் நுழைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.