உடன்பாடு இல்லை என்றால் உயர்ந்த வரிகள் உறுதி: ட்ரம்ப் எச்சரிக்கை!

6 ஆடி 2025 ஞாயிறு 18:07 | பார்வைகள் : 855
அமெரிக்கா ஏப்ரல் மாதம் அறிவித்திருந்த சுங்க வரிகளை, ஜூலை 9 முதல் அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தைக்காக அவகாசம் கொடுத்து, ஆகஸ்ட் 1 முதல் இந்த வரிகள் அமுலுக்கு வரும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட் (Scott Bessent) அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப், உடன்பாடுகள் இல்லையெனில், வரிகள் மீண்டும் அமுலுக்கு வரும் என்று நாடுகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளார். அவர் கூறுவதன்படி, இது பல நாடுகளை விரைவில் சமரசம் செய்யத் தூண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம் இந்த அழுத்தத்தின் கீழ் நல்ல முன்னேற்றம் செய்துள்ளதாக ஸ்காட் பெஸன்ட் கூறியுள்ளார். "ட்ரம்ப் 50% வரி விதிக்கப் போகிறார்" என எச்சரித்த உடனே ஐந்து ஐரோப்பிய தலைவர்கள் உடனடியாக பதிலளித்துள்ளனர்.
அமெரிக்கா, தங்கள் வர்த்தக இழப்பில் 95% பங்குள்ள 18 முக்கிய நாடுகள் மீது கவனம் செலுத்துகிறது. வரிகள் 10%-70% வரை மாறக்கூடும் என்றும், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் இதில் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.