Pantinஇல் விபத்து: மதுபோதையில் பேருந்து ஓட்டுனர்! மூவர் காயம்!

6 ஆடி 2025 ஞாயிறு 14:36 | பார்வைகள் : 502
Pantinஇல் ஜூலை 4 இரவு ஏற்பட்ட விபத்தில், RATP நிறுவனத்தின் 75வது இலக்க பேருந்து மற்றும் கார் மோதியதில் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் ஒன்றுக்கொன்று எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்திற்குப் பிறகு பேருந்து ஓட்டுனருக்கு மதுபான சோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் அவர் மதுபோதையில் இருந்தது உறுதியாகியுள்ளது.
RATP பேருந்தின் முன்புறமும் காரும் மிகவும் சேதமடைந்துள்ளது. விபத்து, Pantinஇல் உள்ள Honoré-d'Estienne-d'Orve சாலையில் ஏற்பட்டுள்ளது.
RATP நிறுவனம் உடனடியாக ஓட்டுனரை பணியிலிருந்து விலக்கி, ஒழுங்குமுறை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நிறுவனம் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடிக்கின்றது மற்றும் ஒட்டுனர்களிடம் சீரான சோதனைகளை மேற்கொள்கின்றது.
மேலும், RATP நிறுவனத்தில் புதிய ஓட்டுனர்கள் பயிற்சி பெறும் போது, பாரிஸ் காவல் துறை மற்றும் நிறுவனத்தின் உட்பிரிவு நிபுணர்களால் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.