Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து! - 14 பேர் காயம்!!

பரிஸ் : கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து! - 14 பேர் காயம்!!

6 ஆடி 2025 ஞாயிறு 04:10 | பார்வைகள் : 7521


 

பரிசில் உள்ள உணவக முற்றம் ஒன்றுக்குள் மகிழுந்து ஒன்று பாய்ந்துள்ளது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

19 ஆம் வட்டாரத்தின் Rue de Belleville வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து இச்சம்பவம் நேற்று ஜூலை 6, சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோடைகாலத்தில் உணவகத்தின் முற்றத்தில் இருக்கைகள் அமைக்க அனுமதிக்கப்படுவது அறிந்ததே. இந்நிலையில், அங்கு அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தவர்களை கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து ஒன்று திடீரென மோதித்தள்ளியுள்ளது. இதில் மொத்தமாக 14 பேர் காயமடைந்தனர். இருக்கைகள் மேசைகள் போன்றன நொருங்கின.

எவருக்கும் உயிராபத்து இல்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். மகிழுந்தைச் செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்