400 ஹெக்டேயர் காடு தீக்கிரை.. 500 தீயணைப்பு படையினர் குவிப்பு!!

5 ஆடி 2025 சனி 21:05 | பார்வைகள் : 495
Aude மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 500 ஹெக்டேயர்கள் காடு எரிந்துள்ளது.
அங்கு 500 வரையான தீயணைப்பு படையினர் இன்று சனிக்கிழமை நண்பகல் முதல் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். A61 நெடுஞ்சாலையை அண்மித்து இந்த காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
500 தீயணைப்பு படையினர் களத்தில் நின்று விளாசி எரியும் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதுவரை 400 ஹெக்டேயர் காடு தீப்பிடித்து எரிந்துள்ளது. 7 வரையான தீயணைப்பு விமானங்கள் (Canadairs) தண்ணீர் பாய்ச்சிவருகிறது.