Paristamil Navigation Paristamil advert login

காவல்நிலையம் மீது மோட்டார் பட்டாசு வீசிய ஒருவர் கைது!

காவல்நிலையம் மீது மோட்டார் பட்டாசு வீசிய ஒருவர் கைது!

5 ஆடி 2025 சனி 16:03 | பார்வைகள் : 389


 

Champigny-sur-Marne நகர காவல்நிலையம் மீது மோட்டார் பட்டாசு வீசிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஜூலை 4, வெள்ளிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Bois-l'Abbé பகுதியில் உள்ள காவல்நிலையம் மீது நபர் ஒருவர் பெற்றோல் எரிகுண்டு வீசி எரியூட்ட முற்பட்டுள்ளார்.

அவரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். அவர் தப்பி ஓடிய நிலையில் துரத்திச் சென்று அவரைக் கைது செய்துள்ளனர். அவர் அருகில் இருந்த கட்டிடம் ஒன்றுக்குள் பெற்றோல் கேன்களை ஒழித்து வைத்திருந்த நிலையில் அவற்றையும் காவல்துறையினர் மீட்டனர்.

விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்