Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

இலங்கையில் சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

5 ஆடி 2025 சனி 10:28 | பார்வைகள் : 551


நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

நேற்று 13,642 வளாகங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய 3,886 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில், 382 இடங்கள் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் பெருகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்