Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

5 ஆடி 2025 சனி 10:28 | பார்வைகள் : 214


அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஜுலை 4 ஆம் திகதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் “Free America Weekend” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்து பேரணிகள், பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் கொள்கைகள் மக்கள் சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நியூயோர்க், சான் பிரான்சிஸ்கோ, டெக்சாஸ், புளோரிடா போன்ற நகரங்களில் மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

குறித்த போராட்டமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்