Paristamil Navigation Paristamil advert login

எல்லை மீறிய காட்டுமிராண்டித்தனம்! -ரஷ்யாவை கண்டிக்கும் பிரான்ஸ்!!

எல்லை மீறிய காட்டுமிராண்டித்தனம்! -ரஷ்யாவை கண்டிக்கும் பிரான்ஸ்!!

5 ஆடி 2025 சனி 06:00 | பார்வைகள் : 803


யுக்ரேன் மீது ஒரே இரவில் 539 ட்ரோன்களையும், 11 ஏவுகணைகளையும் ரஷ்யா கொட்டித்தள்ளியது. இதில் சிலவற்றை மட்டுமே யுக்ரேனால் தடுத்து நிறுத்த முடிந்திருந்தது.

இந்த தாக்குதலை பிரான்ஸ் வன்மையாக கண்டித்துள்ளது. 'யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவு தாக்குதலை ஒரே நாளில் மேற்கொண்டுள்ளது ரஷ்யா.  யுக்ரேனை முழுமையாக அழிக்க நினைக்கிறது. கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டித்தனமாக ரஷ்யா செயற்படுகிறது' என பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர்  Jean-Noël Barrot தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்