தண்டனைகள் அதிகரிக்க வேண்டும்! - மக்கள் கருத்து!!

4 ஆடி 2025 வெள்ளி 16:42 | பார்வைகள் : 1669
குற்றவாளிகளுக்கு தண்டனை இன்னும் அதிகமாக்கப்பட வேண்டும் பெருமளவான பிரெஞ்சு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் குற்றச்செயல்களுக்கான தண்டனை மிக குறைவாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். "பிரான்சில் தண்டனைகள் குறைவாக இருப்பதாக எண்ணுகின்றீர்களா?" என கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் 92% சதவீதமானவர்கள் (பத்தில் ஒன்பது பேர்) 'ஆம்' என பதிலளித்துள்ளனர்.
8% சதவீதமானவர்கள் 'இல்லை' எனவும் தெரிவித்துள்ளனர்.
CSA கருத்துக்கணிப்பு நிறுவனம் CNEWS, Europe 1 மற்றும் JDD ஆகிய நிறுவனங்களுக்காக இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,002 பேர் பங்கேற்றிருந்தனர்.