Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம்

இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம்

4 ஆடி 2025 வெள்ளி 09:36 | பார்வைகள் : 148


இந்தியா - அமெரிக்கா இடையே, 10 ஆண்டுக்கான ராணுவ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.

நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட்டே ஹெக்சேத் உடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசினார். அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையே, 10 ஆண்டுக்கான ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.

அமெரிக்க ராணுவ அமைச்சரிடம் தேஜஸ் இலகுரக போர் விமானத்துக்கான ஜி.இ.,-எப்.404 இன்ஜின்களை விரைந்து வழங்க, ராஜ்நாத் வலியுறுத்தினார்.

இந்தியாவில் எப்.414 ஜெட் இன்ஜின்களை உற்பத்தி செய்வதற்காக, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம் மற்றும் அமெரிக்காவின், 'ஜி.இ., ஏரோஸ்பேஸ்' இடையே முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்யும்படி ராஜ்நாத் கேட்டுக்கொண்டார்.

இரு நாட்டு அமைச்சர்களின் பேச்சு குறித்து பென்டகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இரு நாட்டு ராணுவ அமைச்சர்களும் அடுத்த சில மாதங்களில் நேரடி சந்திப்பு நடத்த உள்ளனர்.

அப்போது, அடுத்த 10 ஆண்டுக்கான அமெரிக்க - இந்திய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர்.

தெற்கு ஆசியாவில், அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளி இந்தியா என அமைச்சர் ஹெக்சேத் கூறினார்.

பிப்ரவரியில் நடந்த, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை பூர்த்தி செய்யும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்காவின் ராணுவ தளவாட விற்பனை, ராணுவ தொழில் ஒத்துழைப்பின் கட்டாய தேவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்