மாரடைப்பு மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல

4 ஆடி 2025 வெள்ளி 08:36 | பார்வைகள் : 153
மாரடைப்பால் இறந்தவர்களுக்கும், கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இல்லை என, சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசனில், இளம் வயதினர் அடுத்தடுத்து மாரடைப்பில் இறந்தனர்.
இது பற்றி கருத்து தெரிவித்த மாநில முதல்வரான சித்தராமையா, “சமீபத்திய மாரடைப்பு மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளது.
முறையாக சோதனை செய்யப்படாமல் தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததே மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம், என்றார்.
கொரோனா தொற்று காலத்தில் நம் நாட்டில், 'கோவாக்சின்' மற்றும் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்நிலையில், 'கோவிஷீல்டு' தடுப்பூசியை தயாரித்த மும்பையின், 'சீரம் இந்தியா' அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
இளம் வயதினர் திடீரென மாரடைப்பில் இறப்பது தொடர்பாக ஆய்வுசெய்த ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ், கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளன.
திடீர் இறப்புகளுக்கு இளைஞர்களின் மரபணுக்கள், ஏற்கனவே உள்ள நோய்கள் மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய நோய் தாக்குதல் ஆகியவையே காரணம்.
இவ்வாறு குறிப்பிட்டு உள்ளது.