Paristamil Navigation Paristamil advert login

இப்போது உங்கள் செல்பேசியில் வாகனப்பதிவுப் பத்திரம்

இப்போது உங்கள் செல்பேசியில் வாகனப்பதிவுப் பத்திரம்

4 ஆடி 2025 வெள்ளி 06:00 | பார்வைகள் : 1996


France Identité  என்ற பயன்பாட்டு செயலியில், வாகனப் பதிவு சான்றிதழ் (Certificat d'immatriculation / Carte grise) தற்போது இணைக்கக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. இது உங்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும வாகனச் சாரதி உரிமம் (Permis de conduire) ஆகியவற்றுக்குப் பின்பு இணைக்கப்படும் மூன்றாவது அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.

 

ஜூன் 30, 2025 முதல், இந்த வசதி France Identité பயன்பாட்டு நபர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. இப்போது, சாலையில் காவற்துறைச் சோதனையில் உங்கள் 'கார்ட் கிரிஸை' நேரடியாக செல்பேசியில் காட்ட முடியும்.

இதற்கு ஏற்புடைய வாகனங்கள்:

மகிழுந்து (voiture particulière)

உந்துருளி (Moto)

ஈருருளி கோன்ற சிறிய இயந்திர வாகனங்கள் (cyclomoteur, tricycle, quadricycle)

யார் இந்த ஆவணத்தை இணைக்கலாம்?

வாகனத்தின் உரிமையாளர் (titulaire)
உப-உரிமையாளர் (co-titulaire)
தனியார் வாடகையாளர்கள் (leasing உட்பட)

முக்கிய நிபந்தனைகள்

இந்த வசதி 2009 இல் அறிமுகமான புதிய வாகன எண் திட்டம் (SIV) அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கே மட்டுமே செல்லுபடியாகும்.

உங்கள் வாகனப்பதிவை செயலியில்  இணைக்க புதிய வங்கி அட்டை போன்ற அடையாள அட்டை (format carte bancaire) அவசியம் தேவைப்படுகிறது.

2025 மார்ச் 31 முதல், இருந்தாலும் செல்லுபடியாகும் பழைய அடையாள அட்டையை புதுப்பித்து இணைய அடையாளம் (identité numérique) பெற இலவசமாக மாற்றலாம்.


France Identité செயலியை iOS (v16.6+) அல்லது Android (v11+) இயங்குதளத்தில் பதிவிறக்கம் செய்யவும்.

செயலியில் உங்கள் இணைய அடையாளத்தை செயற்படுத்தவும்.

« + » அல்லது « Ajouter un titre » ஐத் தேர்வு செய்யவும்.

உங்கள் பதிவுசெய்த எண் மற்றும் பதிவுச்சான்றிதழ் இலக்கத்தை (numéro de formule) உள்ளிடவும்.

உங்கள் கடவுச்சொல்லை தரவும்.

உங்கள் அடையாள அட்டையை மொபைலில் NFC மூலம் வாசிக்கவும்.

பின்னர், உங்கள் வாகனப் பதிவுப் பத்திரம் உங்கள் செல்பேசியில் மின்னணு வடிவத்தில் தோன்றும். இது காவற்துறைச் சோதனை, தொழில்நுட்ப பரிசோதனை, அல்லது பிற நிர்வாக தேவைகளுக்குப் பயன்படக்கூடும்.

இந்த மின்னணு சான்றிதழ் முழுமையாக சட்டப்பூர்வமானது. இது மருத்துவக் காப்பீட்டு அட்டை (Vitale) உள்ளிட்ட பிற ஆவணங்களையும் விரைவில் ஒரே செயலியில் தொகுத்து வைத்துக்கொள்ளும் Digital Box நோக்கத்துடன் செயல்படுகிறது.

உங்கள்  France Identité செயலியை இப்போது புதுப்பித்து இந்த புதிய வசதியை பயன்படுத்தத் தயங்க வேண்டாம்!
 

வர்த்தக‌ விளம்பரங்கள்