Paristamil Navigation Paristamil advert login

முன்கூட்டியே வழங்கப்படும் ஜூலை மாத CAF உதவித்தொகைகள்!!

முன்கூட்டியே வழங்கப்படும் ஜூலை மாத CAF உதவித்தொகைகள்!!

3 ஆடி 2025 வியாழன் 22:28 | பார்வைகள் : 947


CAF  ஜூலை மாதத்திற்கு உரிய உதவித்தொகைகளை இந்த வருடம் ஒரு நாள் முன்னதாகவே, ஜூலை 4 ஆம் தேதி வங்கிகளில் வைப்பில் இடப்படும். 

வழக்கமாக 5 ஆம் தேதி வழங்கப்படும் இந்த பணம், இந்த முறை சனிக்கிழமை வந்ததால், அதற்கும் முன்பாகவே வழங்கப்படுகிறது. இந்த உதவிகள் குடும்பங்கள், வீடு, வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

CAF வழங்கும் உதவிகளில் குடும்பத்தொகை, வீட்டு வசதி உதவிகள் (APL, ALF, ALS), பிறப்புத் தொகை (PAJE), வேலை இல்லாதவர்களுக்கு RSA மற்றும் குறைந்த வருமான தொழிலாளர்களுக்கான Prime d’activité ஆகியவை அடங்கும். இந்த ஆண்டில், அனைத்து முக்கிய உதவிகளும் சராசரியாக 4.6% உயர்த்தப்பட்டுள்ளன. 

CAF இன் இந்த நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கைச் செலவுகளைச் சமநிலைப்படுத்தும் வகையில், தேசிய ஒற்றுமையின் முக்கியத் தூணாக இருக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்