Hauts-de-Seine : பீங்கான் கோப்பையால் தாக்குதல்! - கணவர் உயிருக்கு போராட்டம்!!

3 ஆடி 2025 வியாழன் 19:53 | பார்வைகள் : 719
பீங்கான் கோப்பை ஒன்றினால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Puteaux (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் ஜூலை 1, செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நள்ளிரவுக்கு சற்று முன்பாக Rue de l'Oasis வீதியில் உள்ள வீடொன்றுக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். விரைந்து சென்ற அவர்கள், அங்கு பலத்த காயமடைந்து, இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தலையிலும், கழுத்திலும் வெட்டுக்காயம் இருந்துள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு குறித்த நபரின் முன்னாள் மனைவி கைது செய்யப்பட்டார். வாக்குவாதம் ஒன்றின் முடிவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.