Paristamil Navigation Paristamil advert login

Bac வெற்றியாளர்களுக்கு 2025-ஆம் ஆண்டில் வங்கிகளிலிருந்து பரிசுத்தொகைகள்:

Bac வெற்றியாளர்களுக்கு 2025-ஆம் ஆண்டில் வங்கிகளிலிருந்து பரிசுத்தொகைகள்:

3 ஆடி 2025 வியாழன் 20:11 | பார்வைகள் : 1311


இந்த ஜூலை 4ம் தேதி வெள்ளிக்கிழமை, சுமார் 7,25,000 பேர் Bac தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வார்கள். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல வங்கிகள் பரிசுத்தொகைகளை வழங்குகின்றன.

CIC வங்கி, "Très bien" என்ற மேன்மை பெற்றவர்களுக்கு €160, "bien" க்கு €80, மற்றும் "assez bien" க்கு €40 வழங்குகிறது.

Banque Populaire, 18 முதல் 28 வயதுக்குள் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் (CAP, BEP, Bac, DUT, Licence, Master) €50 மதிப்புள்ள பரிசு அட்டைகளை (bons d'achat)  வழங்குகிறது.

Société Générale வங்கி, பட்டதாரிகளுக்கு €60 வழங்குகிறது , மேலும் புதிய கணக்கு தொடுப்பவர்களுக்கு €80, மேலும் வங்கி மாறுபாட்டிற்கு கூடுதல் €80.

Crédit Agricole வங்கியில், பரிசுத்தொகை ஊரக வங்கிச் கிளைகளின் கையால் நிர்ணயிக்கப்படுகிறது – சில கிளைகள் €250 வரை வழங்கும்.

BNP Paribas, "Esprit Libre Étudiant" சலுகையின் கீழ் புதிய மாணவர்களுக்கு €80, Carte Visa , மற்றும் வங்கி காப்பீடு வழங்குகிறது.


இந்த சலுகைகள் மாணவர்களை ஊக்குவிக்கவும், வங்கியில் புதிய கணக்குகளைத் திறக்க தூண்டவும் உள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்