Paristamil Navigation Paristamil advert login

பாடசாலைகளில் வன்முறை - 186 கத்தி- மாணவர்களுக்கு கண்டிப்பான நடவடிக்கை!

பாடசாலைகளில் வன்முறை - 186 கத்தி-  மாணவர்களுக்கு கண்டிப்பான நடவடிக்கை!

3 ஆடி 2025 வியாழன் 17:59 | பார்வைகள் : 1903


பிரான்ஸ் அரசின் புதிய உத்தரவின்படி, 2025 ஜூலை 3 முதல், பாடசாலை அல்லது கொலேஜ் கத்தி போன்ற ஆயுதம் எடுத்து வரும் மாணவர்கள், கட்டயமான ஒழுக்கக் குழுவுக்கு (conseil de discipline) அழைக்கப்படுவார்கள்.

இந்த நடவடிக்கை, பாடசாலை வளாகங்களிலும் அதன் அருகிலும் ஆயுதங்கள், குறிப்பாக கத்திகளுடன் சுற்றிவரும் அவல நிலையை சமாளிக்க அரசு மேற்கொண்ட தீர்க்கமான நடவடிக்கையாகும்.

இப்போது, பாடசாலைக்குள் அல்லது மாணவனிடம் ஒரு ஆயுதம் இருந்தாலே அது கட்டாய ஒழுக்கக் குழு விசாரணைக்கு வழிவகுக்கும். அத்துடன் நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்படும்.

இந்த நடவடிக்கை, செய்த குற்றத்தை மாநில நீதிமன்றத்திற்கும் அறிவிக்க வேண்டும் என்ற பழைய குற்றவியல் நடைமுறைக் குறியீட்டின் (conseil de discipline) பிரிவு 40-ஐ அடிப்படையாகக் கொண்டது.*

Bagneux (Hauts-de-Seine) பகுதியில் ஒரு மாணவன் தனது பள்ளி வளாகத்தில் கத்திக்குத்துக்கு உள்ளானது.

நோஜோன் நகரில் ஒரு பள்ளி கண்காணிப்பாளர் கொல்லப்பட்டார்.

நோந்த் நகரில் ஒரு மாணவி மற்றொரு மாணவனால் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவங்கள் அரசியல் மற்றும் பொது மக்களின் உணர்வில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

பிரதமர் பிரோன்சுவா பய்ரூ, பள்ளி நுழைவாயில்களில் பாதுகாப்பு கண்காணிப்புக் கதவுகளை ("portiques de sécurité") இயக்கும் முயற்சியை பரிசீலிக்க விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் இதனை எதிர்த்து, 'பாடசாலைகழள பதுங்கு குழிகள் போல் மாற்றக் கூடாது' எனக் கூறினார்.

இதற்குப் பதிலாக திடீர் சோதனைகளை காவற்துறையினர் மற்றும் ஜோந்தார்மினரின் உதவியுடன் நடாத்;ப்படல் வேண்டும் என எலிசபெத் போர்ன் மாற்றுத்திட்டமாக அறிவித்தார்.

ஆனால் நோஜோனில் ஜோந்தார்மினர் இருக்கும் நிலையிலேயே பெண் பாடசாலை ஊழியர் குத்திக் கொல்லப்பட்டார் என்பதும் மறுப்பதிற்கில்லை.

இருப்பினும் 2025 மார்சில் தொடங்கிய பரந்த ஆய்வுப் பரப்பில், 6,000க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிர்ச்சிகரமாக இதில் 186 கத்திகள் கைப்பற்றப்பட்டன.

இந்த புதிய அரசாணை, பாடசாலைகளில் ஆயுதங்களைத் தடுக்க கடுமையான ஒழுக்க நெறிகளை நிர்மாணிக்கிறது. ஒவ்வொரு ஆயுதம் வைத்திருக்கும் மாணவரும், தற்போது கட்டாயமாக ஒழுக்கக்குழுவில் விசாரணை செய்யப்படுவார்கள். இது மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான சட்ட நடவடிக்கையாகும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்