Sheinஇற்கு €40 மில்லியன் அபராதம்: பொய்யான தள்ளுபடிகள்!!
.jpeg)
3 ஆடி 2025 வியாழன் 15:38 | பார்வைகள் : 747
துரித பேஷன் நிறுவனம் ஷீன்னிற்கு (Shein) பிரான்சில் 40 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசின் போட்டி மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (DGCCRF) நடத்திய விசாரணையில், ஷீன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தவறான தள்ளுபடிகள் காட்டி, வணிக மோசடி செய்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில தயாரிப்புகளுக்கு முந்தைய விலையை உயர்த்தி அதன் மீது தள்ளுபடி காட்டியதாகவும், முந்தைய தள்ளுபடிகளை கருத்தில் கொள்ளாமல் புதிய குறைவான விலை காட்டியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் உண்மையில் கிடைக்காத சலுகைகள் கிடைத்ததாக எண்ணும் நிலை உருவாகியுள்ளது.
Shein நிறுவனமானது இந்த அபராதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.