Paristamil Navigation Paristamil advert login

சுற்றுலாத்துறையில் ‘முதலாவது இடத்தை இழந்தது’ பிரான்ஸ்!!

சுற்றுலாத்துறையில் ‘முதலாவது இடத்தை இழந்தது’ பிரான்ஸ்!!

3 ஆடி 2025 வியாழன் 12:56 | பார்வைகள் : 1650


உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நாடு எனும் இடத்தை பிரான்ஸ் இழந்துள்ளது. சென்ற 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் 71 பில்லியன் யூரோக்கள் வருவாயை சுற்றுத்துறை மூலம் ஈட்டியிருந்தது.

உலகின் மிகச்சிறந்த அருங்காட்சியகம், உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள், உலகை அசத்தும் மோனா-லிசா ஓவியம் என உலகின் சிறப்பான விடயங்கள் பிரான்சில் உள்ள போதும், முதலாவது இடத்தை பிரான்ஸ் இழந்துள்ளது.  

சென்ற ஆண்டில் 126 பில்லியன் வருவாயை சுற்றுலாத்துறை மூலம் ஈட்டி, ஸ்பெயின் முதலாவது இடத்தை தக்கவைத்துள்ளது. பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது.

2019 ஆம் ஆண்டில் உலகின் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தந்த நாடாக இருந்த பிரான்ஸ், அதன் பின்னர் கொவிட் 19 காலத்துக்குள் சிக்குண்டது. அதில் இருந்து மீள முயற்சி செய்த வேளையில், ஸ்பெயின் அந்த இடத்தை பிடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்