Paristamil Navigation Paristamil advert login

செம்மணி 38 எலும்பு தொகுதிகள் - இன்னொரு இடத்திலும் மனித என்புத் தொகுதிகள்?

செம்மணி  38 எலும்பு தொகுதிகள் - இன்னொரு இடத்திலும் மனித என்புத் தொகுதிகள்?

3 ஆடி 2025 வியாழன் 10:25 | பார்வைகள் : 204


யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின்போது  மொத்தமாக 38 எலும்பு தொகுதிகள் அடையாளம்  காணப்பட்டுள்ளன.

மேலும் 04 என்பு தொகுதிகள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராஜா தலைமையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த அகழ்வு பணியில் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு அருகில் உள்ள இன்னொரு புதிய இடத்திலும் மனித என்புத் தொகுதிகள் இருக்கலாம் என்ற நிலையில் குறித்த பிரதேசமும் அகழ்வாராய்ச்சியாளர்களால் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்