Paristamil Navigation Paristamil advert login

ஏழு மாதங்களின் பின்னர் பிரதமரின் உத்தியோகபூர்வ புகைப்படம்!!

ஏழு மாதங்களின் பின்னர் பிரதமரின் உத்தியோகபூர்வ புகைப்படம்!!

3 ஆடி 2025 வியாழன் 08:46 | பார்வைகள் : 735


பிரதமர் பிரான்சுவா பெய்ரூ பதவியேற்று ஏழு மாதங்களின் பின்னர், அவரது அமைச்சர்களுடன் இணைந்து உத்தியோகபூர்வ புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

ஜூலை 2, நேற்று புதன்கிழமை காலை இந்த புகைப்படம் ஜனாதிபதியின் Élysée மாளியின் தோட்டத்தில் வைத்து எடுக்கப்பட்டது. பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் எப்போதுவேண்டுமானாலும் கவிழ்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பிரதாய புகைப்படம் எடுக்கும் நோக்கத்தை பெய்ரூ அறவே கைவிட்டிருந்தார். 

முன்னதாக, மூன்று மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த மிஷல் பார்னியே அப்படி ஒரு புகைப்படத்தை பதிவே செய்யவில்லை. அதை அடுத்து, ஏழு மாதங்கள் கழித்து இந்த உத்தியோகபூர்வ புகைப்படத்தை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழாம் இணைந்து எடுத்துக்கொண்டனர்.

இறுதியாக பதிவு செய்யப்பட்ட அரசாங்க புகைப்படம், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அப்போதைய பிரதமராக இருந்த Elisabeth Borne, அமைச்சர்களுடன்  எடுத்துக்குக்கொண்ட புகைப்படமே ஆகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்