அல்ஜீரியாவை எதிர்கொள்ள பிரான்சுக்கு திராணி இல்லை! - மக்கள் தீர்ப்பு!!

3 ஆடி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 1097
பிரான்சுக்கும் - அல்ஜீரியாவுக்கும் இடையே இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எவ்வித சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர பிரான்சுக்கு தைரியம் இல்லை என பிரெஞ்சு மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
"அல்ஜீரியாவை எதிர்கொள்ள பிரான்சுக்கு தைரியம் இல்லை என நினைக்கின்றீர்களா?" என கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் 64% சதவீதமானவர்கள் 'ஆம்' என பதிலளித்துள்ளனர்.
13% சதவீதமானவர்கள் 'இல்லை' எனவும், 22% சதவீதமானவர்கள் 'இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தெரியவில்லை' எனவும், 1% சதவீதமானவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் CNEWS, JDD மற்றும் Europe 1 போன்ற ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது. இதன் முடிவுகள் நேற்று ஜூலை 2 ஆம் திகதி வெளியாகியிருந்தன. கருத்துக்கணிப்பில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் கலந்துகொண்டிருந்தனர்.