19 நாட்களாக ஒலித்த அலாரம்! உறக்கத்தை தொலைத்த மக்கள்!
5 ஆனி 2025 வியாழன் 21:26 | பார்வைகள் : 11458
மே 15 முதல் ஜூன் 2 வரை தொடர்ச்சியாக 19 நாட்கள், கான்ஸில் (Cannes) உள்ள லா போக்கா (la Bocca) பகுதியில் ஒரு அலாரம் இடைவேளையில்லாமல் ஒலித்துள்ளது. இரவும் பகலும் அந்த அலாரம் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி, காவல் துறையினரிடம் புகார் அளித்தும், அந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கட்டிடங்களின் எதிரொலி காரணமாக ஒலியின் துல்லிய நிலை தெரியவில்லை.
இரவில் அந்த ஒலி தூக்கத்தை பாதித்து மக்கள் நிம்மதியின்றி வாழ நேர்ந்துள்ளது. தொலைக்காட்சி பார்க்க முடியாமல், காதை மூடிக்கொண்டு உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஜூன் 2 அன்று அலாரம் சத்தம் கேப்பது நின்றிருந்தாலும், அதன் காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மக்கள் மீண்டும் இந்த சத்தம் ஒலிக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan