வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு…. ?
5 ஆனி 2025 வியாழன் 18:41 | பார்வைகள் : 3202
கமல்ஹாசனுடன் சிம்பு நடித்த ’தக்லைஃப்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அவரது அடுத்த படம் எஸ்.டி.ஆர் 49. இந்த படத்தை ‘பார்க்கிங்’ இயக்குனர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார் என்பதும், இந்த படத்தின் நாயகியாக காயடு லோஹர் நடிக்க இருப்பார் என்பதும் தெரிந்தது. அதுமட்டுமின்றி, இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்க உள்ளார்.
இதை அடுத்து ’எஸ்.டி.ஆர் 50 ’படம் உருவாக உள்ளது என்பதும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்டமான படத்தை சிம்புவே தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’எஸ்.டி.ஆர் 51’ படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.
இந்த மூன்று படங்களுக்குமே அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில், இன்னும் எந்த ஒரு படத்தினதும் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே மூன்று படங்களில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில், அந்த படங்களை முடித்துவிட்டு தான் வெற்றிமாறன் படத்திற்கு வர வேண்டும் என்பதால், இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் தான் உறுதி செய்யப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan