தயாரிப்பாளர் ஆன ரவி மோகன்...!
5 ஆனி 2025 வியாழன் 17:41 | பார்வைகள் : 5406
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் தற்போது ’கராத்தே பாபு’, ’ஜெனி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’பராசக்தி’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றும், ஜெயம் ரவி மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது "ரவி மோகன் ஸ்டுடியோ" என்ற நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இந்த நிறுவனத்தின் லோகோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan