'மிஸ்டர் ஜூகீப்பர்'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
5 ஆனி 2025 வியாழன் 17:41 | பார்வைகள் : 2152
விஜய் டிவியில் குக் வித் கோமாளி உட்பட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ், திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் கதாநாயகனாக ’மிஸ்டர் ஜுக் விப்பர்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான நிலையில், கடந்த ஆண்டு மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஜூன் 27ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ் ஜோடியாக ’நெஞ்சமுண்டு நேர்மையுடன்’, ‘வால்டர்’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்களில் நடித்த ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் தன்வீர் மிர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் என்பவர் இயக்கி உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan